jaguvar sathish
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு" குறள்129:அடக்கமுடைமை
Friday, April 13, 2012
Friday, January 13, 2012
18வது வயதை பூர்த்தி செய்த உலகின் மிக குள்ளமான பெண்!
உலகின் மிகச் சிறிய பெண்ணாக ஜோதி என்பவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆம் இன்று தான் அவர் தனது 18 வயதைப் பூர்த்தி செய்துள்ளார். இவரின் உயரம் 23½ இஞ்சி ஆகும். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற மகிழ்ச்சியுடன் இருந்த ஜோதி சிலிர்ப்புடன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, உலகின் மிகச் சிறிய பெண்ணாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக இருந்த கனவு நனவாகியுள்ளது. பெரிய சிரிப்புடன் ஜோதியின் பெற்றோர்களான Richard Grange, Barcroft ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், அவள் தன்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் இன்றைய தினம் கொண்டாடினாள். பிறந்த நாள் கேக்கும் கிட்டத்தட்ட அவளது உயரத்திலேயே இருந்தது. ஜோதி இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நாக்பூரில் தான் பிறந்து வளர்ந்தார். அவருக்கு achondroplasia என்ற எலும்பு வளர்ச்சிக் குறைபாடுகள் இருந்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மக்களை சந்தோசமாக வைத்திருப்பதையே விரும்புகிறேன் என்கிறார் ஜோதி. தனக்கேற்ற துணிகள் வாங்குவதில் இருந்து தன்னை அழகு படுத்திக் கொள்வது வரை குள்ளம் என்பதைத் தவிர ஜோதியின் ஏனைய செயற்பாடுகள் மற்றைய பெண்களைப் போலவே இருக்கின்றன.
340 காய்களுடன் இருந்த அதிசய வாழைத்தார் !
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் 340 காய்களுடன் இருந்த அதிசய வாழைத்தார் வெட்டப்பட்டது. தொட்டியத்தைச் சேர்ந்த வாழை விவசாயி சந்திரசேகரன் திருச்சி மாவட்ட வாழை உற்பத்தியாளர் சங்க செயலராகவும் உள்ளார். சந்திரசேகரன் தன் தோட்டத்தில் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ஏக்கரில் பூவன்ரக வாழை சாகுபடி செய்திருந்தார்.கடந்த 19 ஆம் திகதி வாழை அறுவடை செய்தார். பொதுவாக வாழைத்தாரில் ஒவ்வொரு சீப்பிலும் 30 முதல், 40 காய்கள் இருக்கும். சந்திரசேகரனின் தோட்டத்தில் அறுவடை செய்த ஒரு வாழைத்தாரில் 12 சீப்புகள் இருந்தன. அதில் மூன்று சீப்புகளில் அதிகளவில் காய்கள் இருந்தன.
முதல் சீப்பில் 51 காய்கள் இரண்டாவது சீப்பில் 49 காய்கள், மூன்றாவது சீப்பில் 50 காய்கள் உட்பட மொத்தம் 340 காய்கள் அந்த வாழைத்தாரில் இருந்தன. விவசாயி சந்திரசேகரன் கூறுகையில் “பொதுவாக வாழைத் தாரில் 200 முதல் 220 காய்களே இருக்கும். ஆனால் எங்களது தோட்டத்தில் வெட்டிய ஒரு வாழைத்தாரில் மூன்று சீப்புகளில் 340 காய்கள் இருந்தது ஆச்சரியமாக உள்ளது” என்றார்.
தொட்டியம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அதிசய வாழைத்தாரை வந்து ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மற்றும் சிறுகமணி வேளாண் அறிவியல்மைய விஞ்ஞானிகள் வாழைத்தாரினை பார்வையிட்டு அதன் ஒரு பகுதியை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
Monday, September 5, 2011
Tuesday, August 23, 2011
ஆகஸ்ட் 25 கேப்டனின் பிறந்த நாள்
நாளைய முதல்வர் கேப்டனின் பிறந்த நாள் ஆகஸ்ட் 25-ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
டாக்டர் விஜயகாந்த் பிறந்த நாள்
1. புரட்சி கலைஞரின் பிறந்த நாள்
2. தே. மு. தி. க. வின் பிறந்த நாள்
3. கறுப்பு எம் .ஜி .ஆரின் பிறந்த நாள்
4. சொக்க தங்கத்தின் பிறந்த நாள்
5. வல்லரசின் பிறந்த நாள்
6. முரசு சின்னத்தின் பிறந்த நாள்
7. பேரரசுவின் பிறந்த நாள்
8. எங்கள் அண்ணாவின் பிறந்த நாள்
9. அடுத்த முதல்வரின் பிறந்த நாள்
நமது கறுப்பு சிங்கத்தின் பிறந்த நாள் தமிழகத்தின் வறுமை ஒழிப்பு தினமாக
கொண்டாடபடுகிறது.. இந்த நன்னாளில் தமிழகத்தில் ஒழலை ஒழித்து லஞ்சம் , லாவண்யம் இல்லாத புது தமிழகத்தை உருவாக்க கேப்டன் தலைமையில் சபதம் ஏற்போம்....
கேப்டனுக்கு இந்த அன்பு தம்பி "ஜாக்குவார் சதீஷ்" -இன் வணக்கங்கள் .
வாழ்த வயதிலை வணங்குகிறோம்..
Tuesday, June 7, 2011
மக்கள் ஆட்சி அ.தி.மு.க. 2011

2011 தமிழக அரசியலில் பெரும் மற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நினைத்தது போல தமிழகத்தின் அராஜக ஆட்சி(தி.மு.க.) அழிக்கப்பட்டு, மக்கள் நிம்மதியுடன் வாழ "வல்லரசு கேப்டன்" கூட்டணியுடன் அ.தி.மு.க அரசு பதவி ஏற்று உள்ளது. அது மட்டும்மில்லாது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. கொடுத்த வாக்குறுதிகள் சில:
1 . குடும்ப அட்டைகளுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி
2 . அனைத்து பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
3 . படித்த பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம்
4 . முதியோருக்கு மாதம் பென்ஷன் 1000 ரூபாய்
5 . என்னும் பல திட்டங்கள் வரைவில் நிறைவேரபடும் என முதலமைச்சர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா கூறியுள்ளார்.
எம். ஜி. ஆர் விடு சென்ற பணிகள் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் அம்மா ஜெயலலிதா எனும் சக்தியால் கேப்டன் துணையால் இனிதே வெற்றி பெற ஜாக்குவார் சதீஷ் ஆகிய எனது வாழ்த்துகள்,...
உங்கள் வெற்றி...................... தமிழகத்தின் வெற்றி..................................
Tuesday, May 31, 2011
அபாயம் விளையும் 13 , 26 ம் தேதிகள் !
அபாயம் விளையும் 13 , 26 ம் தேதிகள் !
| 26 - 01 - 2001 | நாட்டை உலுக்கிய குஜராத் பூகம்பம் |
| 26 - 12 - 2004 | சுனாமியால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி |
| 26 - 07 - 2005 | மும்பையில் வரலாறு காணாத மழையின் பாதிப்பு |
| 26 - 09 - 2008 | ஆமதாபாத்தில் பெரிய குண்டு வெடிப்பு |
| 26 - 11 - 2008 | மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் |
| 13 - 12 - 2001 | பயங்கரவாதிகள் பார்லிமென்ட் மீது தாக்குதல் |
| 13 - 05 - 2008 | ஜெயப்பூரில் குண்டு வெடிப்பு |
| 13 - 09 - 2008 | டில்லியில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு |
Friday, March 18, 2011
2011 தமிழகத்தின் பெரிய மற்றும் சிறிய தொகுதிகள் குறித்த ஒரு பார்வை:
பெரிய தொகுதிகள் - வாக்காளர்கள் - மாவட்டம்
சோழிங்கநல்லூர்- 3,40,615 - காஞ்சிபுரம்
கவுண்டம்பாளையம் - 2,89,912 - கோவை
ஆவடி - 2,65,914 - திருவள்ளூர்
பல்லாவரம் - 2,65,703 - காஞ்சிபுரம்
மதுரவாயல் - 2,57,528 - திருவள்ளூர்
மாதவரம் - 2,54,654 - திருவள்ளூர்
முதுகுளத்தூர் - 2,54,552 - ராமநாதபுரம்
அம்பத்தூர் - 2,51,002 - திருவள்ளூர்
செங்கல்பட்டு - 2,40,496 - காஞ்சிபுரம்
தாம்பரம் - 2,38,295 - காஞ்சிபுரம்
சிறிய தொகுதிகள் - வாக்காளர்கள் - மாவட்டம்
கீழ்வேளூர் - 1,40,127 - நாகப்பட்டனம்
துறைமுகம் - 1,45,183 - சென்னை
கந்தர்வக்கோட்டை - 1,48,625 - புதுக்கோட்டை
நாகப்பட்டனம் - 1,49,560- நாகப்பட்டனம்
ராயபுரம் - 1,51,333 - சென்னை
வேதாரண்யம் - 1,54,281 - நாகப்பட்டனம்
கூடலூர் - 1,55,357 - நீலகிரி
விராலிமலை - 1,57,653 - புதுக்கோட்டை
எழும்பூர் - 1,58,945 - சென்னை
திருப்பூர் தெற்கு - 1,59,886 - திருப்பூர்
Saturday, March 12, 2011
Sunday, March 21, 2010
JAGUVAR "SATHISH"
இவர் தான் ஜாக்குவார் "SATHISH". இந்த ப்ளோக்கை வெற்றிகரமாக இன்று வரை நடத்தி செல்லும் பெருமை இவரையே சாரும். அது மட்டுமில்லாது "தமிழ்நாடு மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊழல் ஓழிப்பு சங்கத்தில்" தாம்பர பெரு நகர துணை தலைவராக தன்னை இணைத்து கொண்டு, அரசாங்க அலுவலகத்தில் ஊழல் பெருசாளிகளாக இருப்பர்வர்களை நீதியின் முன் நிறுத்துகிறார்.
"இயன்றதை செய்வோம், இல்லாதவர்கே" என்னும் சொல்லை தாரக மந்திரமாக நினைத்து இன்று வரை தன்னால் முடிந்த வரை ஏழை, எளியோருக்கு உதவிகள் செய்து வருகிறார்.
இவரை போல் நாமும் இருந்தால் நமக்கு மட்டும் பெருமை அல்ல; நம் தாய் நாட்டிற்கும் பெருமை தான்.......
வாழ்க தமிழ்....! வளர்க இந்தியா.....!!
"வந்தே மாதரம்"
Subscribe to:
Posts (Atom)





