வித்தியாசமாக ஒரு கட்டடத்தைக் கட்டி, பிரேசில் நாட்டு நிறுவனம் ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. Suite Vollard என்ற அந்த நிறுவனம் 360 டிகிரியில் சுழலும் குடியிருப்பு கட்டடத்தைக் கட்டியுள்ளது. மொத்தம் 11 மாடிகள் கொண்ட அந்த கட்டடத்தின் ஓவ்வொரு மாடியும் 360 டிகிரியில் சுழலும் தன்மை கொண்டது. ஒரு சுற்று சுற்றுவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. சுற்றும் வேகத்தை அந்தந்த மாடியில் வசிப்பவர்கள் கூட்டவோ, குறைக்கவோ முடியும். சூரிய உதயத்தையும், சூரிய மறைவையும் குடியிருப்புவாசிகள் ரசிக்கும் வகையில் கட்டடத்தின் வெளிச்சுவரில் கண்ணாடி பதிக்கப்பட்டுள்ளது.
மாடிப்பகுதி ஒன்றின் விலை என்ன தெரியுமா? அதிகமில்லை, 300,000 அமெரிக்க டாலர்கள்.
Monday, December 21, 2009
Sunday, December 20, 2009
ஆவியைப் புகைப்படம் எடுத்ததாக சிலர் கூறுவது உண்மையா?
சுத்த கப்ஸா! ஆவி இருக்கிறது என்பதெல்லாம் சும்மா! பின் எப்படி அந்த வெள்ளை உருவம் புகைப்படத்தில் வந்தது என்று கேட்கிறீர்களா? ஒருவரை ஒரு நாற்காலியில் நீண்ட நேரம் உட்காரவைத்தால், அவரது உடலிலிருந்து வெளிவரும் மின்கதிர் அலைகள் அந்த இடத்திலேயே இருக்கும். அதை ‘Infrared photography’ முறையில் புகைப்படம் எடுத்தால் அந்த நாற்காலியில் வெள்ளையாக ஓர் உருவம் புகை போலத் தெரியும்.
நாற்காலியில் உட்கார்ந்து இருந்தவரின் மின்கதிர் அலைகள் அவர் எழுந்து சென்ற பின்பும் எப்படி நாற்காலியில் தங்கியிருக்கிறதோ, அதேபோல் இறந்தரின் மின்கதிர் அலைகளும் அவரது வீட்டில் தங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவரின் மின்கதிர் அலைகள் அவர் இறந்தபின்னும் நீண்ட நாட்கள் அந்த வீட்டில் இருக்கும். இதுதான் ஆவியாக புகைப்படத்தில் தெரிகிறது.

Saturday, December 19, 2009
வேலை பார்க்கும் பெண்களுக்கு பிரசவ காலத்தில் சட்டம் வழங்கும் உரிமைகள்
குழந்தை பிறப்பதற்கு முன்பும், பிறந்த பின்னரும் ஆறு வாரங்கள் முழுச் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்பட வேண்டும். 12 வாரங்களையும் சேர்த்து குழந்தை பிறந்ததும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
கருச்சிதைவு ஏற்பட்ட மகளிருக்கு, 6 வாரம் விடுப்பு தர வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும்போது பிரசவத்தினால் அல்லது கருச்சிதைவினால் பெண் ஊழியர் நோய்வாய்ப்பட்டால், அவருக்கு ஊதியத்துடன் கூடுதலாக ஒருமாத விடுப்பு தரவேண்டும்.
பிறந்த குழந்தைக்கு 15 மாதம் ஆகும்வரை பணியின் இடையில் இரண்டு முறை குழந்தையைக் கவனிக்கும் அவகாசம் தரவேண்டும்.
கர்ப்பிணி தொழிலாளரின் கடைசி மாதப் பணிகள் கடுமையாக இருக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தாயையும், குழந்தையையும் பாதிக்கிற எந்தவிதமான கடுமையான வேலையும் தரலாகாது.
பிரசவத்தின் போது பெண் ஊழியர் இறந்து விட்டால், அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு அவர் பணியாற்றிய அலுவலகம் ஆறு மாத ஊதியத்தை வழங்க வேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தையும் இறந்து விடுமானால், அந்தக் குழந்தை உயிரோடிருந்த வரையிலான காலத்திற்கு, தாய் பணியாற்றிய கம்பெனி தாய் பெற்று வந்த ஊதியத்தை வழங்க வேண்டும்.

Tuesday, December 15, 2009
செல்போன்களில் 11 இலக்கஎண்கள்; ஜனவரி 1 முதல் அமல்
செல்போன்களில் தற்போது 10 இலக்க எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் 10 இலக்க எண் போதாததாக உள்ளது. விரைவில் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள செல்போன்களின் எண்ணிக்கை 50 கோடியை எட்டும் நிலையில் உள்ளது. இது 2014-ம் ஆண்டு 100 கோடியை எட்டிவிடும் என்று கணித்து உள்ளனர். அப்போது 10 இலக்க எண்ணை பயன்படுத்தினால் எல்லோருக்கும் போன் எண் வழங்க முடியாத நிலை ஏற்படும்.
எனவே 10 இலக்க எண்ணை 11 இலக்க எண்ணாக மாற்ற மத்திய டெலிபோன் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி தற்போது உள்ள எண்ணுடன் முன் பகுதியில் கூடுதலாக “9” என்ற எண் சேர்க்கப்படும் என்று டெலிபோன் வட்டாரங்கள் தெரிவித்தன.இது ஜனவரு மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தனர். ஆனால் இதுபற்றி டெலிபோன் நிறுவனங்களுக்கு இன்னும் டெலிபோன் துறை எந்த தகவலும் அனுப்பவில்லை.
10 இலக்க எண்ணை 11 இலக்கமாக மாற்றும் போது டெலிபோன் நிறுவனங்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் நிலை உள்ளது. ஏற்கனவே உள்ள 10 இலக்க எண்களுக்கு ஏற்றார் போல கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்களில் சாப்ட்வேர்களை உருவாக்கி வைத்துள்ளனர். அதை 11 இலக்க எண்ணாக மாற்றும் போது புதிய சாப்ட்வேர்களை உருவாக்க வேண்டும். இதில் பல சிக்கல்கள் ஏற்படுவதுடன் பண செலவும் ஆகும் என்று டெலிபோன் நிறுவனங்கள் கூறுகின்றன.
மேலும் ஜனவரி 1-ந் தேதியே அமலுக்கு கொண்டு வருவதில் பிரச்சினை ஏற்படும். எனவே கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Monday, December 14, 2009
பூமியைப் போன்ற புதிய கிரகம்
பூமியைப் போன்ற தோற்றமுடைய புதிய கிரகத்தை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையான தட்ப வெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், இந்த புதிய கிரகம் குறித்த ஆய்வில் ஈடுபட்ட குழுவின் தலைவருமான ஸ்டீபன் உத்ரி கூறுகையில், சூரிய குடும்பத்திலிருந்து இது தனித்து வெளியே இருக்கிறது. சிவப்பு நிறத்தில் இந்த கிரகம் காணப்படுகிறது.
இதற்கு OGLE-2005-BLG-390Lb என பெயரிடப்பட்டுள்ளது. பூமியை விட மிகப் பெரிதாக இது இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கிளீஸ் 581 என்ற நட்சத்திரத்தை சுற்றி வந்து கொண்டுள்ளது.இந்தப் புதிய கிரகத்தில் பாறைகள் நிறைந்து காணப்படுவதாக கணித்துள்ளோம். அதேபோல உயிரினங்கள் வசிக்க் கூடிய தட்பவெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த கிரகத்தில் பூஜ்யம் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை தட்பவெப்பம் நிலவுவதாக கணிக்கப்பட்டுள்ளது. தண்ணீர், திரவ நிலையில் இங்கு இருக்கலாம். சூரியக் குடும்பத்திற்கு வெளியே இதுவரை 200க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்துமே வாயுக்களால் நிரம்பியவை. ஆனால் இந்தப் புதிய கிரகம் கிட்டத்தட்ட பூமியைப் போலவே இருப்பதாக நினைக்கிறோம். இந்த கிரகத்தின் சுற்று வட்டம் பூமியின் சுற்று வட்டத்தை விட 1.5 மடங்கு அதிகம்.
இந்த கிரகத்தில் பல கடல்களும் இருக்கக் கூடும். பூமியைப் போலவே இது இருப்பதால் இந்தக் கிரகம் குறித்த ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் பல அரிய தகவல்களும், ஆச்சரிய தகவல்களும் நமக்குக் கிடைக்கக் கூடும். இந்தப் புதிய கிரகம் பூமியிலிருந்து 125 டிரில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்றார் உத்ரி. சிலியில் உள்ள லா சில்லா நகரில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன தொலைநோக்கி மூலம் இந்த புதிய கிரகதத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Tuesday, December 8, 2009
கடலின் ரகசியங்கள்:
- பூமியில் உள்ள உயிர்களில் 99% கடலுக்குள் தான் இருக்கின்றன.
- கடலுக்கு அடியில் கெல்ப் என்றொரு தாவரம் உண்டு. இது அசுரத்தனமாக வளரக்கூடியது. மூன்றே நாட்களில் ஒரு ஆள் உயரத்துக்கும் அதிகமாக வளரக்கூடியது. அதிகபட்சமாக 200 அடி உயரம் வரை வளரும்.
- கடலின் ஆழமான பகுதி பசிபிக் கடலில் இருக்கிறது. இதன் ஆழம் 11kmக்கும் கொஞ்சம் அதிகம். எவரெஸ்ட் சிகரத்தை தொக்கி அந்த இடத்தில போட்டால்கூட அது கடல் மட்டத்தில் இருந்து இரண்டே கால் கி .மீ உள்ளே தான் இருக்கும்!.
- கடலின் எடை 1450-க்கு பின்னால் 15 பூஜ்ஜியங்களை போட்டு கொள்ளுங்கள். பூமியின் மொத்த எடையில் இது வெறும் 0.022 சதவிகம் தான்.
- கடலில் பல வினோத மீன்கள் உண்டு. சில மீன்கள் கொஞ்ச நாள் ஆணாக இருக்கும் பின் பெண்ணாக மாறிவிடும். பெண்ணாக இருந்து ஆணாகவும் மாறும். ஒரே மீனில் ஆணும், பெண்ணும் கூட இருக்கின்றன.
- கடலுக்கு அடியில் உள்ள தங்கத்தை மட்டும் வெளியே எடுக்க முடிந்தால் உலகிலுள்ள எல்லாருக்குமே ஆளுக்கு 4 கிலோ தங்கம் கொடுக்கலாம்.
- மொத்த கடலின் உப்பையும் எடுத்தால் பூமியின் மொத்த நில பரப்பையும் மூடிவிடலாம். அதுவும் 500 அடி உயரத்துக்கு!!..
- கடலில் சுமார் 1 லட்சத்து 99 ஆயிரத்து 146 பெயரிடப்பட்ட உயிரினங்கள் உள்ளன.
- பெயரிடப்படாத உயிரினங்கள் 22 மில்லியன்கள் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 90 சதவிகித எரிமலைகள் கடலில் தான் இருக்கின்றன.
- "ப்ளுவேல்" உலகின் மிக பெரிய உயிரினம். இது டைனோசரசைவிட பெரியது. இதன் இதயம் மட்டும் ஒரு வால்க்ஸ்வகேன் (volkswagen) காரின் அளவு இருக்கும்.
Saturday, December 5, 2009
புவி ""ஹீட்"".... நாமெல்லாம் "அவுட்":
புவி வெப்பமயமாதலால் அடுத்த நூற்றாண்டில் பிரச்சனைகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் தகவல்கள் வயிற்றில் புளி கரைகின்றன..
அதிக வெப்பத்தினால் நம் தோல் பிளாஸ்டிக் போல் இளக ஆரம்பித்துவிடுமாம் .. கண்ணின் கருவிழியே உருகலாம். கம்ப்யூட்டர் , மொபைல் போன் , தெரு முக்கில் நிற்கும் சிலைகள் எல்லாமும் உருகிடும் அபாயம் இருக்கிறதாம்.
எதிர்காலத்தில், மீனை சமைக்க வேண்டாம். ஏனெனில் , கடலிலேயே அது வெந்து தயாராக இருக்கும். "ரெடி டு ஈட்" தான்...!
இதற்கெல்லாம் அடிப்படையான காரணம், நாம் உபயோகிக்கும் எரிபொருள் , எரிவாயு , டீசல் போன்றவற்றால் கார்பன்-டை-ஆக்ஸ்சைடு அதிகமாகி பூமியில் வெப்பம் கிடுகிடுவென ஏறுகிறது. எதனால் அண்டார்டிகாவில் 2070-ல் இருந்து 2090-க்குள் பனிக்கட்டிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடலாம். இதன் விளைவாக மேற்கு வங்கம் , மாலதீவு, போன்றவை பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். பிறகு, மேப்பில் பார்த்து, பேரு மூச்சு விட வேண்டியது தான்.
இன்னும் 50 வருடங்களில் குளிர் நிறைந்த பிரதேசங்களின் வெப்ப நிலை கணிசமான அளவுக்கு எகிறுமாம். அதேபோல் வெயில் பிரதேசங்கள் திடீரென மழை அதிகம் பெய்யும் பகுதிகளாக மற்றம் அடையலாம்.
உலக அளவில் தற்போது அபாயக்கட்டத்தை நெருங்கி இருபது நெதர்லாந்து, பிரான்சு, போலந்து போன்ற கடல் நகரங்களே. எதிர்காலத்தில் பிரச்சனை என்று வந்தால் முதலில் பாதிக்கபடுவது இந்த நாடுகளே.
பன்றிக்காய்ச்சல், சிக்கன்குனியா , எல்லாம் ஜுஜிபி என்பது மாதிரி பல புதிய வியாதிகள் வரகூடும். தண்ணீரின் அளவு குறைந்து, தண்ணீருக்காக இன்னொரு உலக யுத்தமும் வரகூடுமாம்...
வாக்கிங் மீன்:
தண்ணீரில் இருந்து மீனைப் பிடித்து தரையில் விடுகிறிர்கள். அது ஹாயாக நடந்து போனால் எப்படி இருக்கும்? உண்மையில் அப்படி ஒரு மீன் இருக்கிறது. அதன் பெயர் மட்ஸ்கீப்பர். தண்ணீரில் இருந்தால் நீச்சல் அடிக்கும்.... தரையில் விட்டால் வாக்கிங் போகும். "இது பிராணி இல்ல... மீன் தான்" என்கிறது அறிவியல்.
தன் துடுப்புகளையே கால்களாக மாற்றி நடக்கும் இந்த மீன். கொஞ்சம் போரடித்தால் அதையே இறக்கையாக்கி 60cm உயரம் வரை பறக்கவும் செய்யும். அனால் , அது உயிர் வாழ ஓரே கண்டிஷன் அதன் உடல் எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும்.
இந்த மீன் ஆம்பிபியஸ் வகையை சார்ந்தது. இதன் மீன் கொடும்பதில் 11 வகை உண்டு . எல்லாமே தரை, தண்ணீர் பார்ட்டிகள் தான். தரையில் புழு , பூச்சிகளை சாப்பிட்டு குடும்பம் நடத்திவிடும் .
இதை தொட்டிகளில் போட்டு வளர்க்க முடியாது. தாவி குதித்து கிளம்பி விடும். ஆப்பிரிக்க நாடுகளில் இதை வளர்பதற்காக ஸ்பெஷல் கண்ணாடி தொட்டி விற்கபடுகிறது. ஆப்பிரிக்கா, தென் கிழக்கு ஆசியா , ஆஸ்திரலியா, சீனா , ஜப்பான் கடல் பகுதிகளில் இந்த மீன் வசிக்கிறது.
வாங்கி ஒரு தடவை வாக்கிங் கூட்டிட்டு போறிங்களா.............?
நன்றி கடல் விகடன்....
Friday, December 4, 2009
குண்டு பல்பை விட சுருள் பல்பிற்கு மின்சாரம் குறைவு :
ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து தற்பொழுது பிலிபைன்சும் 2010-ம் ஆண்டுக்குள் அனைத்து குண்டு பல்புகளையும் (incandescent bulb) பயன்படுத்துவதை கைவிடுகின்றது.

இதற்கு மாற்றாக குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கக்கூடிய சுருள் பல்புகளை பயன்பாட்டில் கொண்டுவர இருப்பதாக பிலிபைன்சின் அதிபர் கோலோரி (Gloria Macapagal Arroyo) தெறிவித்தார். இவ்வாறான நடவடிக்கையை ஆசியாவில் முதல் நாடக பிலிபைன்ஸ் நடைமுறை படுத்தவிருக்கின்றது.
இந்த மாற்று நடவடிக்கை மூலம் மின்சாரதேவையை பெரும்மளவு குறைக்க இயலும் எனவும், மின்சார உற்பத்தியை குறைப்பதன் மூலம் கரிஅமில வாயுக்கள் (Greenhouse gas) வெளியிடுவதை குறைக்க இயலும் எனவும் ஆசிய வளர்ச்சி வங்கியின் தொழில் நுட்ப ஆலோசகர் தெரிவித்தார்.
சுருள் பல்புகள், குண்டு பல்புகளை காட்டிலும் பன் மடங்கு விலை அதிகம். இதனை சாமானியவர்களுக்கு சாமானியம் ஆக்கும் வகையில் $30 மில்லின் அளவிளான பொருளாதார உதவி திட்டதையும் கொண்டு வர இருப்பதாக மனிலாவை சேர்ந்த வங்கி மேலாளர் தெறிவித்தார்.
அதேல்லாம் சரி இந்த சுருள் பல்ப்ப உபயேகிப்பதால் அப்படி என்ன லாபம்னு கேக்கறிங்கள?

100 வாட் எரிதிறன் கொண்ட குண்டுபல்பின் வெளிசத்தை 25 வார் எரிதிறன் கொண்ட சுருள் பல்பின் மூலம் வெளிபடுத்த இயலும். சுருள் பல்பின் ஆயுட்காலம் குண்டு பல்பின் ஆயுட்காலத்தை விட 6 முதல் 10 மடங்கு அதிகம். இதன் மூலம் பொருமளவிளான எரிபொருளையும் எழை மக்களுக்கு மின்சார மானியம்மாக வழங்கும் பணத்தையும் அரசங்கத்தால் மிச்சப்படுத்த முடியும்.
அதேல்லாம் சரி இவ்வளவு எழுதிறியே நீ என்ன பல்பு உபயோகபடுத்துறனு? கேட்கிற்ங்கதானே....
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக என்னுடைய வீட்டில் வெறும் சுருள் பல்புகள் மட்டுமே. என் வீட்டில் 16 சுருள் பல்புகள் உபயோகத்தில் உள்ளன. இதன் மூலம் சாரசரி 42 கிலோ வாட் மின்சாரம் குறைவாக உபயோகிக்கின்றேன்.
16 பல்புகள் * 60 வாட் * 2 மணி நேரம் * 30 நாட்கள் = 57600 வாட்/ஒருமாதம்
16 பல்புகள் * 15 வாட் * 2 மணி நேரம் * 30 நாட்கள் = 14400 வாட்/ஒருமாதம்
1 கிலோ வாட் மின்சாரம் 1 ரூபாய் என்றாலும் மாதம் கிட்டதட்ட 42 ரூபாய் எனக்கு சேமிப்பு.
நீங்க எப்போ எரிபொருளையும் உங்களது பணத்தையும் சேமிக்க போறிங்க ?

5km சுற்றளவுக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் : தமிழக அரசு திட்டம்
அத்தனை மாநிலங்களும் விரல்சூப்பிக் கொண்டு இருக்கும் போது, தமிழ்நாடு SUCCESS திட்டப் பணிகளை முடித்துவிட்டது. S U C C E S S (Scheme for Universal Access and Quality Education at the Secondary Stage) comprehensive proposal for the Central project named 'envisaged to be implemented during the 11th five year plan. 2007-12 ) மேலும் 2008-09 க்கான ஆண்டுத் திட்டத்தையும் முடித்துவிட்டது. 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தமிழ்நாடு செயல்திட்டம் தீட்டியுள்ளது. மிகவும் பாராட்டத்தக்க விசயம்.
அரசியல்,கட்சி,குடும்பம் தாண்டி மக்களுக்காக அதிகாரிகளும், அமைச்சர்களும் கொஞ்சமாவது சிந்தித்தால் நல்ல விசயங்கள் நடக்கும். திட்டங்கள் தொய்வில்லாமல் மக்களை அடைய எல்லாம் வல்ல அரசியல்வாதிகள் உதவ வேண்டும்.
Govt to open one school every 5 km
http://timesofindia.indiatimes.com/Cities/Chennai/Govt_to_open_one_school_every_5_km/articleshow/3084170.cms
Scheme for Universalization of Access to Secondary Education (SUCCESS)
http://www.indiabudget.nic.in/es2007-08/chapt2008/chap105.pdf
Scheme for Universalization of Access to Secondary Education (SUCCESS) and improvement of quality at secondary stage during the Eleventh Five Year Plan. The main objective of the programme is to make secondary education of good quality available, accessible and affordable to all young students in the age group 15-16 years (classes IX and X).
The target of the scheme is (i) Universal access of Secondary level education to all students in the age group 15-16 years by 2015 and (ii) Universal retention by 2020. It envisages (i) provision of necessary infrastructure and resources in the secondary education sector to create higher capacity in secondary schools in the country and for improvement in quality of learning in the school; (ii) provision for filling the missing gaps in the existing secondary schools system (iii) provision of extra support for education of girls, rural children and students belonging to SC/ST, minority and other weaker sections of the society and (iv) a holistic convergent framework for implementation of various schemes in secondary education. தமிழக அரசு திட்டம்

Tuesday, December 1, 2009
சென்னையில் உள்ள கிழக்கு தாம்பரத்தில் வேற்றுமையில் ஒற்றுமையுடன் இருக்கும் 11 வாலிபர்கள்:
கிழக்கு தாம்பரத்தில் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கும் 11 வாலிபர்களை பார்த்து ஊரே வியக்கிறது. இவர்கள் 11 பேரும் வெவ்வேறு கட்சியை சார்ந்தவர்கள்; வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் இருப்பினும் நண்பர்கள் என்ற ஒற்றுமையில் இணைந்து நாட்டிற்காக பல தொண்டுகளை செய்கின்றனர். அவர்களின் விவரம்:
வாழ்க தமிழ் . வளர்க இந்தியா. வந்தே மாதரம்
K. சதீஷ் குமார் Bsc, (தே.மு.தி.க )
A.N.ராஜன் B.A, ADGMS, PGDCA, (அ.தி.மு.க )
M.ஜெய் குமார் B.A, (தே.மு.தி.க)
S.சந்தோஷ் குமார் B.A, (தி.மு.க)
M.விக்னேஷ் ITI, DIPLO (அ.தி.மு.க)
U.கவிராஜ் B.A, DCA (அ.தி.மு.க)
C.ஹேம் குமார் B.A, PGDCA (தி.மு.க)
N.கணபதி Bsc (அ.தி.மு.க)
R. வேணு B.A (தே.மு.தி.க)
D.முருகன் ITI (தி.மு.க)
R.பிரபு B.A, PGDCA (காங்கிரஸ் )
இந்த 11 பேரும் ஜாதி, மதம், கட்சி என்று பேதம் பார்க்காமல் நாட்டின் நலனுக்காக பாடுபடுகிறார்கள். மற்றவர் வீட்டின் வேலைகளை தன் சொந்த வேலையாக நினைத்து இரவென்று பாராமல், மழையென்று பாராமல், வெயிலென்று பாராமல் மற்றவர் நலனுக்காகவும் , நாட்டின் நலனுக்காகவும் பாடுபடுகிறார்கள்.
" தமிழ்நாடு மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு சங்கம்" என்ற சங்கத்தில் உறுப்பினராக இணைந்து, மாநில தலைவர் டாக்டர் மு.அக்பர் ஐயா மற்றும் மாநில பொதுச்செயலாளர் அண்ணன் டாக்டர் க.நாகஜோதி அவர்களின் உதவியுடன் அரசாங்க அலுவலகங்களில் ஊழல் பெருசாளிகளாக இருக்கும் அதிகாரிகளை களை எடுகிறார்கள்.
அவர்களிடம் இது பற்றி கேட்டால் சிறிதும் தற்பெருமை கொள்ளாமல் , நன்னடத்தையுடன் " இது எங்கள் கடமை , உங்கள் கடமை, ஒவ்வொரு இளைய சமுதாயதின் கடமை" என்று சொல்லிவிட்டு தொண்டாற்ற புறப்பட்டுவிட்டார்கள்.
நாமும் இவர்களை போல் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இந்தியாவை வளம் பெற செய்வோமாக..!
வாழ்க தமிழ் . வளர்க இந்தியா. வந்தே மாதரம்
அரசு எச்சரிக்கை: திருமணமான 3 மாதத்திற்குள் பதிவு செய்ய விட்டால் வழக்கு
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
"கடந்த 24-11-2009 முதல் தமிழகத்தில் நடைபெறும் எல்ல திருமணங்களும் கட்டாய பதிவு செய்ய வேண்டும்". என்று சட்டமாக்கபட்டுள்ளது. இந்து திருமண சட்டம் , இந்திய கிறிஸ்துவ திருமண சட்டம் , சிறப்பு திருமண சட்டம், முகமதியர்கள் ஷரியத் திருமண சட்டம், மற்றும் வேறெந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் செய்திருந்தாலும் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் கட்டாய பதிவு செய்ய வேண்டும்.
எதற்கான விண்ணப்ப படிவங்கள் எல்ல பதிவு அலுவலகங்களிலும் கிடைக்கும். கட்டாய திருமண பதிவு சட்டம் குறித்த தகவல்கள் www.tnreginet.net என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. திருமணமான 90 நாட்களுக்குள் முறையான ஆதரங்களுடன் பதிவாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் மூலமும் விண்ணபிக்கலாம். விண்ணப்பத்துடன் முறையான ஆதாரங்கள் இருப்பின் திருமண பதிவாளர் ஒப்புதல் அளிப்பார்.
ஆதாரங்கள் சரியாக எல்லை எனில் திருமண பதிவு மறுக்கப்படும். மறுக்கப்பட்ட ஆணை குறித்து 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம். அங்கும் மறுக்கப்பட்டால் பதிவு துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
24-11-2009 முதல் நடைபெறும் எல்லா திருமணங்களும் எந்த ஜாதி, எந்த மதமானாலும் கட்டாய பதிவி செய்ய வேண்டும்.
திருமணத்தை பதிவு செய்யாதவர்கள், தவறான தகவல் கொடுத்தவர்கள், கட்டாய பதிவு திருமண சட்டத்தை மீறுபவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தினகரன் 1-12-2009

Subscribe to:
Posts (Atom)