Friday, January 13, 2012

18வது வயதை பூர்த்தி செய்த உலகின் மிக குள்ளமான பெண்!

உலகின் மிகச் சிறிய பெண்ணாக ஜோதி என்பவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆம் இன்று தான் அவர் தனது 18 வயதைப் பூர்த்தி செய்துள்ளார். இவரின் உயரம் 23½ இஞ்சி ஆகும். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற மகிழ்ச்சியுடன் இருந்த ஜோதி சிலிர்ப்புடன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, உலகின் மிகச் சிறிய பெண்ணாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக இருந்த கனவு நனவாகியுள்ளது. பெரிய சிரிப்புடன் ஜோதியின் பெற்றோர்களான Richard Grange, Barcroft ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், அவள் தன்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் இன்றைய தினம் கொண்டாடினாள்.




பிறந்த நாள் கேக்கும் கிட்டத்தட்ட அவளது உயரத்திலேயே இருந்தது. ஜோதி இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நாக்பூரில் தான் பிறந்து வளர்ந்தார். அவருக்கு achondroplasia என்ற எலும்பு வளர்ச்சிக் குறைபாடுகள் இருந்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மக்களை சந்தோசமாக வைத்திருப்பதையே விரும்புகிறேன் என்கிறார் ஜோதி. தனக்கேற்ற துணிகள் வாங்குவதில் இருந்து தன்னை அழகு படுத்திக் கொள்வது வரை குள்ளம் என்பதைத் தவிர ஜோதியின் ஏனைய செயற்பாடுகள் மற்றைய பெண்களைப் போலவே இருக்கின்றன.

340 காய்களுடன் இருந்த அதிசய வாழைத்தார் !


திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் 340 காய்களுடன் இருந்த அதிசய வாழைத்தார் வெட்டப்பட்டது. தொட்டியத்தைச் சேர்ந்த வாழை விவசாயி சந்திரசேகரன் திருச்சி மாவட்ட வாழை உற்பத்தியாளர் சங்க செயலராகவும் உள்ளார். சந்திரசேகரன் தன் தோட்டத்தில் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ஏக்கரில் பூவன்ரக வாழை சாகுபடி செய்திருந்தார்.
கடந்த 19 ஆம் திகதி வாழை அறுவடை செய்தார். பொதுவாக வாழைத்தாரில் ஒவ்வொரு சீப்பிலும் 30 முதல், 40 காய்கள் இருக்கும். சந்திரசேகரனின் தோட்டத்தில் அறுவடை செய்த ஒரு வாழைத்தாரில் 12 சீப்புகள் இருந்தன. அதில் மூன்று சீப்புகளில் அதிகளவில் காய்கள் இருந்தன.
முதல் சீப்பில் 51 காய்கள் இரண்டாவது சீப்பில் 49 காய்கள், மூன்றாவது சீப்பில் 50 காய்கள் உட்பட மொத்தம் 340 காய்கள் அந்த வாழைத்தாரில் இருந்தன. விவசாயி சந்திரசேகரன் கூறுகையில் “பொதுவாக வாழைத் தாரில் 200 முதல் 220 காய்களே இருக்கும். ஆனால் எங்களது தோட்டத்தில் வெட்டிய ஒரு வாழைத்தாரில் மூன்று சீப்புகளில் 340 காய்கள் இருந்தது ஆச்சரியமாக உள்ளது” என்றார்.
தொட்டியம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அதிசய வாழைத்தாரை வந்து ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மற்றும் சிறுகமணி வேளாண் அறிவியல்மைய விஞ்ஞானிகள் வாழைத்தாரினை பார்வையிட்டு அதன் ஒரு பகுதியை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.